Banner Ad

Thursday, July 7, 2011

History of Padmanaba Swamy Temple


பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் உள்ள
நகைகள் தமிழருக்கு உரிமைப்பட்ட பொக்கிஷங்கள்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் தமிழருக்கு உரிமைப்பட்ட பொக்கிஷங்களை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபாசுவாமி கோயிலில் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள தங்கம், வைரம், வைடூரிய நகைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 6 அறைகளில் இதுவரை ஐந்து அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில்
ளீ1
லட்சம் கோடி மதிக்கத்தக்க பொக்கிஷங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. மற்றொரு அறையில் பல கோடிக்கு சொத்துகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில் இந்த பொக்கிஷங்களில் தமிழருக்கு உரிமைப்பட்ட பொக்கிஷங்களை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று பண்பாட்டு வரலாற்று மொழியியல் உள்நாட்டு ஆய்வு நிறுவனம் (கிளிரோ &இந்தியா) கோரிக்கை வைத்துள்ளது.

கிளிரோ இந்தியா அமைப்பின் தலைவர் டாக்டர் இம்மானுவேல் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

திருவனந்தபுரம் பத்ம நாபசுவாமி கோயில் வரலாற்று சான்றுகளின்படி 1200 வருடங்களுக்கு பழைமையானதாக தெரியவருகிறது. குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் கட்டப்பட்ட பின்னர்தான் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் கி.பி.784 வாக்கில் கட்டப்பட்டது. கிபி 1209ல் மன்னர் வீர ராமவர்மா, பத்மநாப சுவாமி கோயிலுக்கு பல நன்கொடைகளை கொடுத்துள்ளதும், வள்ளியூர் அருகே களக்காடு நகரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ராம மார்த்தாண்ட வர்மா கி.பி.1336ல் இந்த கோயிலுக்கு அதிகாரிகளை நியமித்ததும் தெரியவருகிறது.
கி.பி.1458&1460ம் ஆண்டுகளில் மன்னர் ராம மார்த்தாண்ட வர்மா&7 என்பவரால் இந்த கோயில் புனரமைப்பு செய்யப்பட்டது. கி.பி 1505ம் ஆண்டு இந்த கோயிலில் தணிக்கை அலுவலகம் துவக்கப்பட்டது.

இக்கோயில் சேர பரம்பரையில் வந்த தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட ஒன்றாகும். சேர ஆட்சி கொல்லம், கரூர், கொடுங்கல்லூர், விழிஞ்ஞம் போன்ற இடங்களில் பரவி இருப்பினும் அதன் தாய் பகுதிகளாக குமரி மாவட்டத்தில் திரு விதாங்கோடு, அதங்கோடு, இரணியல், பத்மநாபபுரம், வன்னியூர் போன்ற இடங்களோடு பின்னி பிணைந்து காணப்பட்டது என்பதை தமிழக வரலாறுகள் வெளிப்படுத்துகின்றன.

சேர மன்னர்களின் (வேணாடு) தலைநகரமாக விளங்கிய இரணியல், திருவிதாங்கோடு, பத்மநாபபுரம் 18ம் நூற்றாண்டுக்கு பின்னரே திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பத்மநாபசுவாமி கோயிலில் திறக்கப்பட்ட அறைகளில் மட்டும்
ளீ1

லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய தங்கத்தினால் ஆன நகை, கிரீடங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சேமிப்பு நாட்டில் பஞ்ச காலங்களில் தம் மக்களை காக்க பயன்படுத்தும் நோக்கில் மன்னர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் கிபி 1620 களில் புதுப்பித்தலுக்கான செலவில் மூன்றில் 2 பாகமான பெரும்பகுதியை (பதினெட்டாயிரம் பணம்) இன்றைய குமரி மாவட்டத்தின் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த நாடாள்வார்கள் வழங்கியுள்ளனர் என்று ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

1677ல் �எட்டரை யோகம்� என்ற ஒரு புது அமைப்பு உருவானதன் காரணமாக இக்கோயிலுக்கு பல்வேறுவிதமான குழப்பங்களும், சிக்கல்களும் உருவாகின. இந்த சூழ்நிலையில் 1686ல் இக்கோயில் தீக்கிரையாக்கப்பட்டது. 1731&1733க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய மார்த்தாண்ட வர்மா என்ற �அனுஷம் திருநாள்� இக்கோயிலை புதுப்பித்தார்.


நாகர்கோவில், ஜூலை 6:
நன்றி : Dinakaran

0 comments:

Post a Comment